CiniKingz

Social Icons

Thursday, 5 December 2013

Actor Vadivelu on twitter

Posted Image
கடைசியில் வடிவேலுவும் டுவிட்டர் அக்கவுண்டை தொடங்கி விட்டார். இனி கைப்புள்ள கருத்துக்களை டுவிட்டரில் கேட்கலாம். படித்துறை பாண்டியின் மெசேஜ்களை படிக்கலாம். அலார்ட் ஆறுமுகத்தின் அல்லுசில்லுகளை பார்த்து சிரிக்கலாம். தீப்பொறி திருமுகத்தின் முகம் பார்க்கலாம்.

Posted Image

வடிவேலு தன் டுவிட்டரில் வெளியிட்ட முதல் வாசகம்...

"வந்துட்டேன்யா... வந்துட்டேன்யா..." :eaea:

இப்போது டுவிட்டரில் தெனாலிராமன் கெட்டப்பில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் தான் டுவிட்டருக்கு வந்த காரணத்தை சொல்லியிருக்கிறார். அவர் டுவிட்டர் வீடியோவில் பேசியிருப்பதாவது:


^_^ (அவர் மாடுலேசனிலேயே படிக்கவும்) ^_^
"ஹலோ டுவிட்டர் ஃபேன்ஸ் வணக்கம்...

என் நண்பர்கள் எல்லாருமே சேர்ந்து ஒரு அக்கவுண்ட் ஓப்பன் பண்ணுங்க... ஒரு அக்கவுண்ட் ஓப்பன் பண்ணுங்கன்னு சொல்லிக்கிட்டே இருந்தாங்க. அதுக்கு நான் ஏற்கெனவே பேங்குல அக்கவுண்ட் ஓப்பன்லதானே இருக்கு மறுபடியுமா...ன்னு கேட்டேன். இல்லைங்க டுவிட்டர்ல ஒரு அக்கவுண்ட் ஓப்பன் பண்ணுங்கன்னு சொன்னாங்க. அந்த பேங் அக்கவுண்டுல பணத்தை பரிமாறுறோம். இந்த அக்கவுண்டுல ரசிகர்களோட அன்பை பரிமாறுறோம்னு சொன்னாங்க. அப்படியா கடைய தொறங்க நான் சந்திச்சே ஆகணும்னு தொறந்தாச்சு.

Posted Image
இனிமே நாம அடிக்கடி சந்திச்சுக்கிட்டே இருக்கலாம். இடையில ஒரு சின்ன கேப் விழுந்து போச்சு. விரைவில் உங்கள சந்திக்கிறேன். என்னோட படம் ரிலீசாகப்போவுது. அதாங்க ஜகஜாலபுஜபல தென்னாலிராமன் படம் மூலமா சீக்கிரமா சந்திக்கிறேன். எல்லாருக்கும் பை... பை..."

என்று தன் முதல் வாய்சை கொடுத்திருக்கிறார்.
Posted Imageவடிவேலு டுவிட்டர் கணக்கு தொடங்கிய ஒரே நாளில் பத்தாயிரம் பேர் அவரது பாலோவர்சாக இணைந்திருக்கிறார்கள்.



Here The Tweet's

0 comments:

Post a Comment